கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தொழில்நுட்பம் சார்ந்த தகவல் பரிமாற்றம், புதுமையைக் கண்டுபிடித்தல் நறுமணப் பயிர்களின் தரம் சம்பந்தப்பட்ட காரணிகளை உடனடியாகப் பகுப்பாய்வு செய்தல் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வேளாண் பல்கலைகழகம் கையெழுத்திட்டது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் நிறுவனமான கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் இடையே புரிந்துணர்வு ஓப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் நிறுவனமான கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்கோவையில் கையெழுத்தானது. கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழிலில் பல புதுமைகளைக் கையாளும் ஒரு நிறுவனமாகும்.

வேளாண்மை சார்ந்த கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் இணைந்து செயல்படுவது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். தொழில்நுட்பம் சார்ந்த தகவல் பரிமாற்றம், புதுமையைக் கண்டுபிடித்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல், செயல்திறனைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களான நறுமணப் பயிர்களின் தரம் சம்பந்தப்பட்ட காரணிகளை உடனடியாகப் பகுப்பாய்வு செய்தல் போன்றவை இந்த ஒப்பந்தத்தின் இதர முக்கிய நோக்கங்களாகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி இந்த ஒப்பந்தம் உருவாக பெரிதும் துணைநின்றார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இரா. தமிழ்வேந்தன் மற்றும் கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குனர்பத்மினி சம்பத் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பெ. ஐரின் வேதமணி இந்த ஒப்பந்தம் உருவாக அடித்தளமிட்டு செயல்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில், ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளைப் பற்றி இவர்கள் விளக்கினார்கள்.

பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ந.சக்திவேல், நறுமணப் பயிர்கள் மற்றும் மலைத்தோட்டப் பயிர்கள் துறையின் பேராசிரியர் முனைவர் க.வி. ராஜலிங்கம் மற்றும் கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் திரு. சாரங்கன் வளவன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...