உடுமலை தமிழிசை சங்கத்தின் துணைத் தலைவர் நினைவேந்தல் நிகழ்ச்சி

அமரர் வஞ்சிமுத்து கொண்ட நட்பு, அன்னாரின் தமிழ்ப்பணி, சமுதாயப் பணிகள் குறித்து எடுத்துரைத்து புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.


திருப்புர் :உடுமலை தமிழிசைச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அமரர் வஞ்சிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி உடுமலையில் நடைபெற்றது.



உடுமலை தமிழிசைச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அமரகா வஞ்சிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி உடுமலை மிழிசைச்சங்கத்தின் சார்பில் பாரதியார் நூற்றாண்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி தலைமை வகித்தார்.



சங்கத்தின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு. சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.

ஆர். கே. ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் அரிமா ஆர்.கே. ராமசாமி, அமரர் வஞ்சிமுத்து கொண்ட நட்பு, அன்னாரின் தமிழ்ப்பணி, சமுதாயப் பணிகள் குறித்து எடுத்துரைத்து புகழஞ்சலி செலுத்தினார்.



நல்லாசிரியர் கு.சீ. மணி, பேராசிரியர் முனைவர் செல்வநாயகம், வானொலி தங்கவேல், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா ஆகியோர் அன்னாரின் சிறப்புகளை கூறிப் புகழ் அஞ்சலி செலுத்தினர். அமரர் வஞ்சிமுத்து ஆசிரியரிடம் பயின்ற மாணவிகள் பானுப்பிரியா, மோகனப்பிரியா மற்றும் ராம் கோடி ராகவி ஆகியோர் தங்கள் ஆசிரியருக்கு இரங்கல் கவிதை படித்தனர்.

முன்னதாக ஆசிரியர் சின்னராசு வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக கல்வியாளர் செ. மூர்த்தி நன்றி கூறினார். சங்க ஒருங்கிணைப்பாளர் அமிர்தநேயன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அமரர் வஞ்சிமுத்துவின் புதல்வர் சரவணன் ஏற்புரை நிகழ்த்தினார். உடுமலை தமிழிசை சங்கத்தின் நிர்வாகிகள் எஸ். எம். டிராவல்ஸ் நாகராஜ் மற்றும் சத்யம் பாபு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அமரர் வஞ்சிமுத்து திருவருவப்படத்திற்கு அனைவரும் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...