உடுமலை அருகே வீட்டின் பூட்டைஉடைத்து 15 பவுன் நகை திருட்டு - காவல்துறை விசாரணை

உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: வீட்டின் கதவு பூட்டை உடைத்து நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்

உடுமலை அடுத்த எலையமுத்தூர் பிரிவு அருகே உள்ள கொங்குரார் லே-அவுட்டை சேர்ந்தவர் நாகராஜன் (57). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தனது குடும்பத்துடன் கடந்த 4-ம் தேதி இரவு வீட்டை பூட்டிக்கொண்டு திருமூர்த்திநகரில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டார்.

இவர் குடியிருந்து வரக்கூடிய வீட்டு உரிமையாளரும் மூன்று நாட்களுக்கு முன்னரே மடத்துக்குளத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டார். இந்த சூழலில் கடந்த 5-ம் தேதி மாலை 5 மணிக்கு நாகராஜன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கேட் மற்றும் வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது டேபிளில் இருந்த 3¾ பவுன்நகைகள் திருடு போனது தெரிய வந்தது.

அதன்பின்பு கீழ்தளத்துக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தது. இது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தார். இதை உரிமையாளர் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 12 நகைகள் திருடு போனது. ஆக மொத்தம் 15 ¾ பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து நாகராஜன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...