கோவையில் தீபாவளிக்குப் பிறகு செம்மொழிப் பூங்காவின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் - மாநகராட்சி ஆணையர் தகவல்

மத்திய சிறை வளாகத்தில் உள்ள உத்தேச இடத்தை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், இந்த திட்டத்தின் முதல் கட்டம் தீபாவளிக்கு பிறகு தொடங்கும் என்றும், இதற்கு ₹172 கோடி செலவாகும் என்றும் தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகரம் தீபாவளி கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான தாவரவியல் பூங்காத் திட்டமான செம்மொழிப் பூங்காவின் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க உள்ளது.

இதுதொடர்பாக பேசிய மாநகராட்சி ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன், மூன்று பூர்வாங்க பணி ஆணைகளுக்கான அனுமதிகள் கிடைத்துள்ளதாகவும், இரண்டு கூடுதல் அனுமதிகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் உறுதி செய்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட தொடக்க தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், தீபாவளிக்குப் பிறகு இந்த திட்டத்தை தொடங்குவோம் என்றுஎதிர்பார்ப்பதாக பிரபாகரன் கூறினார். மத்திய சிறை வளாகத்தில் உள்ள உத்தேச இடத்திற்குச் சென்று பிரபாகரன், ஆய்வு மேற்கொண்டார்.



172 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை விரைவுபடுத்துமாறு உள்ளாட்சி அமைப்புகளை மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் செம்மொழிப் பூங்கா என்ற கருத்து முதலில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் முன்மொழியப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இல்லாததால் இந்தத் திட்டம் பத்தாண்டுகளாக கிடப்பில் கிடந்தது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், 2021 தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு மையக் கடமையாக இத்திட்டத்தை புதுப்பித்திருந்தார்.

45 ஏக்கர் பரப்பளவில், மல்டிலெவல் கார் பார்க்கிங், குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டு மண்டலம், நடைபயிற்சி,ஜாகிங்கிற்கான தடங்கள், நகரின் பசுமை மற்றும் பொழுதுபோக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...