உடுமலை அருகே குடியிருப்பு பகுதியில் முதலை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடித்து முதலைப் பண்ணையில் விட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வனத்துறையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கல்லாபுரம் ஊராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் குடியிருப்பை ஓட்டியுள்ள அமராவதி ஆற்றங்கரை பகுதியில் பொதுமக்கள் தினமும் துணி துவைத்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக முதலை நடமாட்டம் ஒன்று இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அமராவதி வனத்துறையினர் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடித்து முதலைப் பண்ணையில் விட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வனத்துறையிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...