உடுமலையில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் - கால்நடை உதவி இயக்குனர் ஆய்வு

உடுமலை கோட்டத்தில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாக்குமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் முகாமினை கால்நடை உதவி இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

உடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்தின் உபதொழிலான கால்நடை வளர்ப்பு பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பசு மற்றும் எருமை உள்ளிட்ட கால்நடைகளை கோமாரி நோயில் இருந்து பாதுகாக்கும் வகையில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட கழுகரைப் பகுதியில் நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பூசி முகாமை உடுமலை கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் கூறுகையில், கோமாரி நோய் தடுப்பு ஊசி 4- ம் சுற்று வருகின்ற 26 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.

உடுமலை கோட்டத்தில் மொத்தம் உள்ள 63 ஆயிரம் பசு மற்றும் எருமை இனங்கள், மாநில எல்லையோர கிராமங்களில் உள்ள 12 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஏற்கனவே செலுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ப செயல் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தடுப்பூசி குழுவினர் தங்கள் பகுதிக்கு வரும் பொழுது தங்களது 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...