உடுமலையில் அருகே வளர்ப்பு நாய் மாரடைப்பால் மரணம் - சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

உடுமலை அருகே ஆசையாக வளர்த்து வந்து வளர்ப்பு நாய்க்கு உரிமையாளர் கண் கலங்கிய படி முறைப்படி இறுதி சடங்குகள் செய்து முடித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் மாரடைப்பில் மரணம் அடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட அமணலிங்க நாடார் வீதியில் ஒருவர் 8 வருடமாக ஆசையாக வளர்ப்பு நாய் வளர்த்து வந்து உள்ளார்.



இந்த நிலையில் நேற்று வழியாகச் சென்ற தெரு நாய் வளர்ப்பு நாய் பார்த்து வேகமாக குறைக்க அடுத்த சில நொடிகளில் திடீரென மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தது.



பின்னர் உடனே வளர்ப்பு நாயை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது நாய் மாரடைப்பால் உயிர்இழந்து இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் ஆசையாக வளர்த்து வந்து வளர்ப்பு நாயிற்கு முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. மாரடைப்பால் நாய் உயிரிழந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடுமலையில் எட்டு வருடமாக ஆசையாக வளர்த்து வந்த வளர்ப்பு நாய் மாரடைப்பால் உயிர்இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...