திருப்பூரில் விடிய விடிய பெய்த மழை - சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் அவதி

கனமழை காரணமாக பூலுபவட்டி பகுதியில் உள்ள குட்டை நிரம்பி, அதில் இருந்து தண்ணீர் சாலைகளில் சென்றது. இதனால், சாலைகள் வெள்ளம் போல் காட்சியளிப்பதால், அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் விடுமுறை அளித்துள்ளார்.



இந்த நிலையில் இரவு பெய்த கனமழையின் காரணமாக ரோடுகளின் அனைத்து பகுதிகளும் வெள்ளம் போல காட்சியளிக்கிறது.



திருப்பூர் மாநகர பகுதிக்கு உட்பட்ட தோட்டத்து பாளையம் பகுதியில் மழை நீரின் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை நீரினால் சூழப்பட்டுள்ளது.



அதேபோல பூலுபவட்டி பகுதியில் உள்ள குட்டை நிரம்பியதால் அதிலிருந்து வரும் மழைநீர் அனைத்தும் சாலைகளின் வருகிறது.



இதனால் அப்பகுதி வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. இதகாரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி தங்கள் வாகனத்தை இயக்குகின்றனர்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வளம் பாலம் முழுவதுமே மழை நீரால் மறைந்துள்ளது. மழை நீர் வெள்ளம் போல செல்வதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளில் சாலையில் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி செல்கிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...