கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ராக்கிங் சம்பவம் - குற்றச்செயலில் மேலும் ஒரு மாணவர் சேர்ப்பு

இரண்டாம் ஆண்டு மாணவர் ராக்கிங் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வெங்கடேஷ் என்ற மேலும் ஒரு மாணவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார்(பி.எஸ்.ஜி) தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரை அதே கல்லூரியில் படிக்கும் 7 மாணவர்கள் மொட்டை அடித்து ரேக்கிங் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ராக்கிங்கில் ஈடுபட்ட பரணிதரன், வெங்கடேஷ், மாதவன், மணி, ஐயப்பன், சந்தோஷ், யாலிஸ் ஆகிய ஏழு மாணவர்களை பீளமேடு காவல்துறையினர் கைது செய்து ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்பு இரவு நேரத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் வெங்கடேஷ் என்ற மேலும் ஒரு மாணவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். மேலும் அனைத்து கல்லூரிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...