கோவை அருகே காலணியில் ஒளிந்திருந்த நாக பாம்பு - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மழைகாலம் என்பதால் பாம்புகள் கதகதப்பான இடத்தை நோக்கி நகர்வது வழக்கம். மழைக்காலங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


கோவை: கோவை வெள்ளலூர் அருகே காலணியில் ஒளிந்திருந்த நாகப்பாம்பு மீட்டு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

வெள்ளலூர் அடுத்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசிக்கும் பிரதீப் என்ற எட்டாம் வகுப்பு மாணவன். அவர் வீட்டில் காலணி ஸ்டாண்ட் அருகே சென்ற பொழுது காலணியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. பின்னர் காலணியை நகர்த்தி பார்த்ததில் காலணிக்கு உள்ளே பாம்பு ஒன்று இருந்துள்ளது.

அதனை பார்த்தவுடன் பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் கொடுத்து அங்கு சென்ற வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரரான மோகன் பாம்பை லாபகரமாக பிடித்திருக்கின்றார்.



பிடிப்பட்டபாம்பு நாகபாம்பு என பின்னர் தெரியவந்தது.



பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. பாம்புகள் வெளியில் உலா வரும் பொழுது கதகதப்பான இடத்தை நோக்கி நகர்வது வழக்கம் எனவும் அதன் காரணமாக காலணிக்குள் புகுந்திருக்கும் என பாம்பு பிடி கூறியுள்ளார்.

பொதுமக்கள் இது போன்ற மழை காலங்களில் கவனமாக இருப்பது அவசியம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...