கோவை மத்திய சிறையில் மனித உரிமை மீறல் - சிறைக்கைதிகள் உரிமை மையம் ஆர்ப்பாட்டம்

கோவை மத்திய சிறையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கைதிகளுக்கும் வார்டன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கைதிகள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


கோவை: கோவை மத்திய சிறையில் தொடர்ந்து நடந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து சிறைக் கைதிகள் உரிமை மையம் சார்பாக கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மத்திய சிறையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கைதிகளுக்கும் வார்டன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கைதிகள் 7 பேர் மீது ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கைதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.



இந்த நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிறை கைதிகள் உரிமை மையம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறைக் கைதிகள் உரிமை மையம் தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...