கோவையில் பத்து மணி நேரத்திற்கு மேலாக கொட்டிய மழை - ஒரு பள்ளிக்கு மட்டும் விடுமுறை

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் நீர் தேங்கி நிற்பதால், இன்று தலைமை ஆசிரியரின் அறிவுத்தலின் பெயரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திலகவதி அப்பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்துள்ளார்.


கோவை: கோவையில் நேற்று இரவு சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்ததால் கோவை மாநகர் மற்றும் புறநகர் என பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்தது.

குறிப்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், பள்ளிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் நீரை வெளியேற்றும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதே பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் நீர் தேங்கி காணப்படுவதால் இன்று தலைமை ஆசிரியரின் அறிவுத்தலின் பெயரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திலகவதி அப்பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...