கோவையில் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்த அரச மரத்திற்கு மறுவாழ்வு

வேலாண்டிபாளையத்தை சேர்ந்த செயல் செயற்பாட்டு களம் அமைப்பினர் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற்று இன்று காலை 10 மணி அளவில் மரம் வெட்டும் பணியாளர்களைக் கொண்டு அரச மரத்தின் கிளைகளை  நறுக்கி இரண்டு கிரேன், ஒரு ஜேசிபி மூலம் மரத்தை பிடிங்கி எடுத்துச்சென்று மயானத்திற்கு முன்பகுதியில் நடவு செய்தனர்.


கோவை: கோவை தடாகம் சாலை, கணுவாய் அருகே கே.என்.ஜி புதூர் பிரிவு, சத்யம் கிட்னி சென்டர் முன்புறமுள்ள ஒரு பெரிய 30 ஆண்டு பழமையான அரச மரம் ஒன்று சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்தது.



தகவல் அறிந்த கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த செயல் செயற்பாட்டு களம் அமைப்பினர் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதிபெற்று இன்று காலை 10 மணி அளவில் மரம் வெட்டும் பணியாளர்களைக் கொண்டு அரச மரத்தின் கிளைகளை நறுக்கி இரண்டு கிரேன் ஒரு ஜேசிபி மூலம் 30 அடி நீளமுள்ள லாரி ஒன்றில் ஏற்றி தடாகம் சாலை வழியாக நான்கு கிலோ மீட்டர் பயணித்து வெங்கிட்டாபுரம் அவிலா கான்வென்ட் முன்புறமுள்ள அம்பேத்கர் சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டு வேலாண்டிபாளையம் மயானத்திற்கு முன்புறம் மாலை 4 மணி அளவில் மறு நடவு செய்யப்பட்டது.



செயல் சமூக செயற்பாட்டுக் களம் முன்னெடுத்த இந்த இயற்கைப் பணியில் வெங்கிட்டாபுரம் வேலாண்டிபாளையம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் தோழர்கள் பங்கேற்றார்கள். இதற்கான பணியை செயல் செயற்பாட்டு களத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆ.நந்தகுமார், இணை ஒருங்கிணைப்பாளர் சா.கதிரவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...