கோவாவில் நடைபெற்ற களரி போட்டி - உடுமலை மாணவர்கள் 4 பேர் வெண்கலம் வென்று சாதனை

தமிழகத்தில் களரி போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஈடுபட ஆர்வமாக இருப்பதால் தமிழக அரசு ஊக்கப்படுத்த முன் வர வேண்டும் என்று தேசிய அளவிலான களரி போட்டில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த களரிப்பயட்டு வீரர்கள் கோவாவில் நடைபெற்ற 37 ஆவது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

அக்டோபர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை 43 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 10 ஆயிரத்துக்கு மேலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். களரி பயட்டு போட்டியில் 16 மாநிலங்களைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தமிழக அணி சார்பில் உடுமலை பகுதியை சேர்ந்த 8 வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் சுவடுகள் பிரிவு, உருமி வீசல், கெட்டுகேறி ஆகிய பிரிவுகளில் நான்கு வெண்கல பதங்கள் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.



இதன் மூலம் லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தமிழக அணி சார்பில் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு லெப்டினேட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை சார் சார்பில் நிர்வாகிகள் செல்வராஜ், பால முருகன், கணேஷ் சந்திரன், சிவக்குமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து மேலும் பல பதங்கங்கள் வெல்வதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் கூறும் பொழுது. தமிழகத்தில் களரி போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஈடுபட ஆர்வம் இருப்பதால் தமிழக அரசு ஊக்கப்படுத்த முன் வர வேண்டும். மேலும் தற்போது தேசிய அளவிலான களரி போட்டியில் வெண்கல பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளோம். எனவே தமிழக முதல்வர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...