கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஒருவர் தீக்குளிப்பு முயற்சி

தனியார் நிறுவனத்தில் ஊதியம் தர வில்லை என கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஒருவர் உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை ஆட்சியர் தீக்குளிக்க முயன்றவரை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஒருவர் உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் சத்தமிடவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வந்த ரவிச்சந்திரன் என்பதும் தற்பொழுது திருப்பூரில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்த நிலையில் 20 நாட்கள் வேலை செய்ததற்கான ஊதியத்தை கொடுக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்து அவரை பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...