தீபாவளியையொட்டி ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் - உடுமலையில் வாகன உரிமையாளர்கள் கொண்டாட்டம்

உடுமலையில் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் தீபாவளியை முன்னிட்டு போர்வை மற்றும் தலகாணி இனிப்புகள் வழங்கப்பட்டன. முதியோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு ஓட்டுநர் நல சங்கம் சார்பாக தீபாவளியையொட்டிநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய உழைப்பாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல சங்கம் ஆக்டிங் டிரைவர்சஸ் மற்றும் நகர சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பங்களிப்போடு தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் போர்வை மற்றும் தலகாணி தீபாவளியை முன்னிட்டு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



அகில இந்திய உழைப்பாளர்கள் ஓட்டுநர் நல சங்கம் தலைவர் சுரேஷ்குமார் மாநிலத் தலைவர் தாமோதரன் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தல் படி மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் நடைப்பெற்றது.

மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உடுமலை நகரத் தலைவர் முருகவேல் உடுமலை நகர செயலாளர் காஜா மைதீன் உடுமலை நகர பொருளாளர் விக்னேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...