மலை அடிவாரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டாம் - உடுமலை அடி வார மக்களுக்கு வனத்துறை வேண்டுகோள்

உடுமலை அடிவாரப் பகுதியில் முகாமிட்டுள்ள வனவிலங்குகள் தீபாவளி பட்டாசு சத்தத்துக்கு மிரட்சி அடைந்து விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதுடன், குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என வனத்துறை எச்சரித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலை அடிவாரப் பகுதியில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள பொருப்பாறு, கோடந்தூர், ஆட்டுமலை, தளிஞ்சி, தளிஞ்சி வயல், ஈசல்தட்டு, மாவடப்பு, குலிப்பட்டி, மேல்குருமலை உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

அத்துடன் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும் வனப்பகுதியில் வசித்து வருகிறது. கோடைகால வறட்சியின் போது அடிவாரப்பகுதிக்கு வருகை தந்த வனவிலங்குகள் இன்னும் அடர்ந்த வனப்பகுதிக்கு திரும்பிச் செல்லவில்லை. மலை அடிவாரப் பகுதியிலேயே முகாமிட்டு வருகிறது. இந்த சூழலில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மலைவாழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் வனப்பகுதியில் பட்டாசுகள் வெடிப்பதற்கு நிரந்தரமாக தடை உள்ளது. ஆனாலும் பட்டாசுகள் வனப்பகுதிக்குள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக ஒன்பதாறு மற்றும் சின்னாறு சோதனை சாவடிகளில் வனத்துறை சார்பில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி மலை அடிவாரத்தை ஒட்டி உள்ள பகுதியில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

ஏனெனில் அடிவாரப் பகுதியில் முகாமிட்டுள்ள வனவிலங்குகள் பட்டாசு சத்தத்துக்கு மிரட்சி அடைந்து விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதுடன், குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. எனவே அடிவாரப் பகுதியில் முடிந்த வரை அதிக அளவில் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

அத்துடன் வாகன ஓட்டிகள் வனப்பகுதிக்குள் பட்டாசுகளை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். தவறும் பட்சம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...