பாதுகாப்பான தீபாவளி - உடுமலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

பட்டாசுகள் வெடிக்கும் போது பெரியவர்களின் துணையின்றி பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அரசின் அறிவுரையை பின்பற்றி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என உடுமலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பண்டிகை காலம் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தான். ஆனாலும் பண்டிகைகளை பாதுகாப்பாக கொண்டாடுவது மிக முக்கியம். அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வருகின்ற தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது பற்றி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.



நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை வகித்து துப்புரவு பணியாளருக்கு புத்தாடை வழங்கி, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூறினார்.



பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்போது, குடிசை பகுதிகளுக்கு அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையில் தொடக்கூடாது. பெரியவர்களின் துணையின்றி நீங்களாகவே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் போது அரசின் அறிவுரையை பின்பற்றி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும். குறிப்பாக மணல் மற்றும் தண்ணீர் நிரம்பிய பக்கெட்டுகளை அருகில் வைத்திருக்க வேண்டும். கையில் வைத்து வெடிக்கக் கூடாது. விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று எடுத்துரைத்தார்.

பள்ளி மாணவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...