களைகட்டும் தீபாவளி பண்டிகை - திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலத்தினர்

தீபாவளிக்கு சொந்த மாநிலம் செல்ல வடமாநிலத்தவர் திருப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டதால் அலப்பியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் ரயிலுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.


திருப்பூர்: தீபாவளி பண்டிகையை கொண்டாட வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால் திருப்பூர் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.



திருப்பூர் பனியன் நிறுவனங்களில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பனியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தொழிலாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.



இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமான புலம் பெயர் தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர்.



கேரள மாநிலம் அலப்பியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் ரயில் வர உள்ளதால் ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்து வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...