ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கோவையில் தீபாவளி கொண்டாட்டம்

உக்கடம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு கோவை விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.



கோவையில் செயல்பட்டு விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக, அதன் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி தலைமையில், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சாலைகளில் வசிக்கும் முதியோர் மற்றும் இளையோருக்கு தொடர்ந்து உதவிகள் செய்வது, உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை உக்கடம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி, அறங்காவலர் நிவேதா ஆகியோர் கலந்து கொண்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக மனித நேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் தலைவர் சுலைமான் கலந்து கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஸ்வரி பெண்கள் மட்டும் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வருவதாகவும், இது போன்று தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...