தீபாவளியை முன்னிட்டு உடுமலை அமராவதி அணையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

தீபாவளியை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகள், அமராவதி முதலைபண்ணையில் உள்ள சிறுவர் பூங்காவில் யானை, சிறுத்தை மற்றும் விலங்குகளில் உருவங்களின் முன்பு தன் படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில்தீபாவளி முன்னிட்டு சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு குவிந்தனர்.



மேலும், அமராவதி அணை பகுதியில் படகு சவாரி அதிக ஆர்வம் காட்டி நீண்ட நேரம் காத்திருந்து பாதுகாப்பான முறையில் படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்தனர்.



மேலும், அருகில் உள்ள அமராவதி முதலைப்பண்ணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட முதலைகளை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் கூறினர்.



இதற்கிடையில் முதலைபண்ணையில் உள்ள சிறுவர் பூங்காவில் யானை, சிறுத்தை மற்றும் விலங்குகளில் உருவங்களின் முன்பு தன் படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...