உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - வாகனம் நிறுத்தம் ஏற்படுத்த கோரிக்கை

பஞ்சலிங்க அருவியில் விசேஷ நாட்களில் தற்காலிகமாக வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்க கோவில் நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்த காரணத்தால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் தற்பொழுது மழை குறைந்த காரணத்தால் கடந்த இரு தினங்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.



தீபாவளியை தொடர் விடுமுறையை முன்னிட்டு பஞ்சலிங்க அருவியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவு குவிந்தனர்.



இதனால் திருமூர்த்தி மலை பகுதியில் அதிகளவு வாகன நெரிசல் ஏற்பட்டது எனவே விசேஷ நாட்களில் தற்காலிகமாக வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்க கோவில் நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.



இதேபோல உடுமலை அருகே தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள காந்தளூர் பகுதியில் இறைச்சி பாறை அருவியிலும் தீபாவளியை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...