உடுமலையில் அதிகாலை முதல் கனமழை - உழவர் சந்தையில் தேங்கிய மழைநீர்

உடுமலையில் உள்ள உழவர் சந்தை முன்பு மழைநீர் தேங்காதவாறு வடிகால்கள் அமைக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் உழவர் சந்தை பகுதியில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருது நிலையில் நேற்று அதிகாலை முதல் கன மழை பெய்த காரணத்தால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.



இந்த நிலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தை முன்பு அதிக அளவு மழை நீர் தேங்கியால் காலை வழக்கம் போல் உழவர் சந்தை பகுதிக்கு வந்த விவசாயிகளும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.



எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் உழவர் சந்தை முன்பு மழை நீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...