கோவை அருகே நள்ளிரவில் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் - தக்காளி, வாழை விளைபொருட்கள் சேதம்

காட்டு யானைகள் விரட்டப்பட்டாலும், மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீத்திபாளையம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களின் தோட்டத்திற்குள் நள்ளிரவில் புகுந்த காட்டுயானைகள் விளைபொருட்களை சேதப்படுத்தி சென்றன.

கோவை மேற்கு தொடர்சி மலை பகுதிகளில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. அந்த யானைகள் சில நேரங்களில் வனத்துக்கு ஒட்டிய கிராம பகுதிகளுக்கு வந்து உணவு ஆதாரங்களை உட்கொண்டு வனத்துக்குள் மீண்டும் சென்றுவிடும். இந்த நிலையிலே தீத்திபாளையம் பகுயிதில் நள்ளிரவு 10க்கும் மேற்பட்ட யானைகள் வனத்திலிருந்து வெளியே வந்திருக்கின்றன.



தீத்திபாளையம் பகுதியில் உள்ள தக்காளி மற்றும் வாழை தோட்டங்களுக்கு சென்று யானைகள் உணவு ஆதாரங்களை உட்கொண்டன. யானைகள் கூட்டமாக வந்ததனால் தக்காளி மற்றும் வாழைத்தோட்டங்கள் சேதப்படுத்தப்பட்டன.



தக்காளி அடுக்கி வைக்கப்பட்டிருந்த டிப்பர்கள் தூக்கி எறியப்பட்டு தக்காளிகள் வன யானைக் கூட்டத்தால் கீழே கொட்டி வீசப்பட்டன. தோட்டம் மட்டுமின்றி அருகாமையில் உள்ள ரேஷன் கடைக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையில் உள்ள உணவுப் பொருட்களையும் உட்கொண்டு ரேஷன் கடையும் சேதப்படுத்தி இருக்கின்றன. வழக்கமாக தோட்டத்திற்குள் மட்டும் வரும் யானைகள் தற்போது ஊருக்குள்ளும் புகுந்திருப்பதனால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்திருக்கின்றனர்.

பத்திற்கும் மேற்பட்ட யானைகள் தக்காளி வாழை தோட்டத்திலிருந்து வனத்திற்குள் விரட்டப்பட்டிருக்கின்றன. எனவே மாவட்ட வனத்துறை யானைகள் புகாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.



நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் அதிகாலை விரட்டப்பட்டிருக்கும் நிலையில் அது மீண்டும் போகாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தீத்திபாளையம் விவசாயிகள் மற்றும் கிராம வாசிகளின் அறிவுறுத்தலாக இருக்கின்றன.

ஒரு லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கும் விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியிருக்கிறனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...