கோவையில் கார் ஒர்க்‌ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்து - 13 கார்கள் எரிந்து நாசம்

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் தீபாவளி பண்டிகையையொட்டி அனைவரும் விடுமுறை எடுத்து ஊருக்கு சென்றுள்ள நிலையில் தீ விபத்து ஏற்பட்டது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கார் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 கார்கள் எரிந்து நாசமாகின.

கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேல் பகுதியான ஸ்ரீநகர் பகுதியில் சாய்பாபா காலனியை சேர்ந்த வர்கீஸ் என்பவர் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கண்டத் கார் ஒர்க் ஷாப் என்ற பெயரில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வரும் இவர் அதன் கிளையாக கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேல்பகுதியான ஸ்ரீ நகர் பமுதியிலும் கார் டிங்கரிங் மற்றும் பெயிண்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 13 ஆண்டுகளாக அங்கு தொழில் செய்து வரும் இவரிடம் 6 பேர் பணியாற்றி வரும் நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அனைவரும் விடுமுறை எடுத்து ஊருக்கு சென்றுள்ளனர்.



இதனிடையே ஒர்க் ஷாப்பில் நின்றிருந்த கார்களில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது.



இந்த தீ விபத்தில் அங்கிருந்த 13 கார்கள் எரிந்த சூழலில் 10 கார்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதம் அடைந்தது. இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கவுண்டம்பாளையம் காவல் நிலைய போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...