உடுமலை அருகே ஊராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா - ஏராளமானோர் பங்கேற்பு

குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கம், எதிர்கால இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு தகுதியுள்ளவர்கள் இன்றைய குழந்தைகள் என்பதை மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி நமது இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளானது குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.



விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை வகித்து பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.



தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி குழந்தைகள் தினமான இன்று குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கோவை பல் தொழில்நுட்பக் கல்லூரியின் வேதியியல் துறை பேராசிரியர் பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு, குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கம், அதோடு மட்டுமல்லாமல் எதிர்கால இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு தகுதியுள்ளவர்கள் இன்றைய குழந்தைகள் என்பதை மாணவர்களிடம் தெரிவித்தார்.

இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற குழந்தைகளாகிய நீங்கள் நன்றாக படித்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாணவர்களிடம் எடுத்துரைத்தார். தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு சாதனையாளர்களாக நீங்கள் வரவேண்டும் என்று கூறி குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை கூறினார்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த மாதம் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பள்ளி உதவி ஆசிரியர் கண்ணபிரான் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...