மடத்துக்குளம் அருகே பள்ளி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி - கேக் வெட்டி கொண்டாட்டம்

குழந்தைகள் நாளையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டு கேக் வெட்டி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பள்ளி மாணவ மாணவியருக்கு குழந்தைகள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் இராமே கவுண்டன்புதூர் அரசு துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியருக்கு எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நமச்சிவாயன் தலைமை தாங்கினார். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சாய் நெல்சன் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பிற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.



மேலும் மாணவ மாணவியர்கள் குழந்தைகள் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர் இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...