உடுமலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் - திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்ததால் பரபரப்பு

காட்டாற்று வெள்ளத்தால் அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பூஜைகள் நிறுத்தப்பட்டன. கோவில் நிர்வாகமும் வனத்துறையினரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அமணலிங்கேஸ்வரர் கோயிலை மழைநீர் சூழ்ந்தது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதியில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது திடீரென பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. 



இதனால் திருமூர்த்தி மலை அடிவாரம் பகுதியில் உள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் பூஜைகள் நிறுத்தப்பட்டன.



மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் கோவில் நிர்வாகமும் வனத்துறையினரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...