எம்.எஸ்.எஸ் நிறுவனம் சேவை குறைபாடு - இழப்பீடு வழங்க கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

ஓமலுாரை சேர்ந்த வாடிக்கையாளர் வைதேகி என்பவருக்கு 2022ம் ஆண்டு, பால் பொருள் எந்திரங்கள் தயாரிப்பு நிறுவனம் அனுப்பிய டயரி மெஷினை டெலிவரி செய்யாமல் எம்.எஸ்.எஸ் நிறுவனம் திருப்பி அனுப்பியது கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது.


கோவை: பார்சல் சர்வீஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, ஆவாரம்பாளையம் ரோட்டில், ராஜசேகர் என்பவர் பால் பொருள் எந்திரங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

சேலம் ஓமலுாரை சேர்ந்த வாடிக்கையாளர் வைதேகி என்பவருக்கு, 2022, செப். 1ல், 10,030 ரூபாய் மதிப்புள்ள, டயரி மெஷின் ஒன்றை, எம்.எஸ்.எஸ். என்ற பார்சல் சர்வீஸ் வாயிலாக, அனுப்பி வைத்தார். ஆனால், வாடிக்கையாளருக்கு டயரி மெஷின் டெலிவரி செய்யப்படாமல் திரும்பி வந்தது.

இது பற்றி கேட்ட போது, 'முகவரியில் ஆள் இல்லை' என்று கூறினர். ஆனால், குறிப்பிட்ட முகவரிக்கு, பார்சலை கொண்டு செல்லாமல், வேறு முகவரிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், ராஜசேகர் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், 'மனுதாரர் அனுப்பிய முகவரிக்கு, பார்சலை எடுத்து செல்லாமல், எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாருக்கு மொத்தம் 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...