சூரியநல்லூரில் ஆந்திர ரக நிலக்கடலை - ஆய்வு செய்த உதவி இயக்குனர்

ஆந்திர ரக கடலை ஆரம்ப காலத்தில் கிளைகள் இருந்தால் எளிதில் அடையாளம் கண்டு களைகளை நீக்க முடியும். அதிகப்படியான வேர்களை கொண்ட ரகமாக இருப்பதால் அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது ஒரு செடிகள் ஏறக்குறைய 100 முதல் 150 காய்கள் வரை இருக்கும் அதிகப்படியாக புரதம் மற்றும் எண்ணெய் சத்து 51 சதவீதம் கொண்டது.


திருப்பூர்: தாராபுரம் அருகே சூரிய நல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் ஆந்திர ரக நிலக்கடலை விதை பண்ணையை விதை சான்று மற்றும் அங்க சான்று துறை உதவ இயக்குனர் ஆய்வு செய்தார்.

விவசாயிகள் விதை பண்ணைகள் அமைத்து நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும் தமிழ்நாட்டில் நிலக்கடலை அதிக பரப்பளவில் மானாவாரி மற்றும் இரவை பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சூரிய நல்லூர் பகுதியில் நிலக்கடலை விதை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது ஆதார நிலை ஒன்று இதை பண்ணைக்காக கோ 18 12 ரகமானது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலக்கடலை ரகமானது ஆந்திர மாநிலம் ஆச்சாரியா பல்கலைக்கழகத்தால் 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது மானாவாரி மற்றும் இரவை பருவத்திற்கு ஏற்ற ரகம் அனைத்து வகை நிலங்களிலும் பயிர் செய்வதற்கு உகந்த ரகமாக உள்ளது.

மற்ற நிலக்கடலை கிரகங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது அதிகப்படியான சிறிய இலைகளைக் கொண்டு பரவலாக 24 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது ஆரம்ப காலத்தில் கிளைகள் இருந்தால் எளிதில் அடையாளம் கண்டு களைகளை நீக்க முடியும் அதிகப்படியான வேர்களை கொண்ட ரகமாக இருப்பதால் அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது ஒரு செடிகள் ஏறக்குறைய 100 முதல் 150 காய்கள் வரை இருக்கும் அதிகப்படியாக புரதம் மற்றும் எண்ணெய் சத்து 51% கொண்டது.

100 காய்கறிகளின் எடை 40 கிராம் எண்ணெய் சத்து அதிகம் இருப்பதால் எண்ணெய் உற்பத்தியில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது வறட்சி பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் கொண்டது தரமான விதைகளை உற்பத்தி செய்ய விதை பண்ணைகளை அமைக்க ஆர்வம் உள்ள விவசாயிகள் அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தி ஆளர்கள் உரிய காலத்திற்கு பதிவு செய்து விதைப்பண்ணை அமைத்தால் நல்ல முளைப்புத்திறன் சீரான வளர்ச்சி அடையக்கூடிய தரமான விதைகளை உற்பத்தி செய்து வழங்க முன்வர வேண்டும் இவ்வாறு கூறினார்.

இந்த ஆய்வின்போது விதை சான்று அலுவலர் சங்கீதா உதவி விதை அலுவலர் சந்தானகிருஷ்ணன் மற்றும் விவசாயிகளுடன் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...