மூலனூர் பகுதியில் கண்வலி கிழங்கு சாகுபடியில் நஷ்டம் - உரிய விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

ஏக்கருக்கு 100 கிலோ விதை கிடைப்பதற்கு பதிலாக வெறும் 25 கிலோ மட்டுமே கண் வலி கிழங்கு கிடைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இவற்றை ஒழுங்குமுறை விற்பனை கூடம் கொண்டு சென்று நல்ல விலைக்கு விக்கலாம் என்று கொண்டு சென்றால் இங்கு விற்க முடியாது என கூறுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் எதிர்பாராத விலை கிடைக்காததால் கண் வலி கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏக்கருக்கு 100 கிலோ விதை கிடைப்பதற்கு பதிலாக 25 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. கிலோ 3000 ரூபாய்க்கு விற்கும் எனக் கூறினர். ஆனால் தற்போது பதினைந்தாயிரம் கூட வாங்க ஆள் இல்லை.

ஒழுங்குமுறை விற்பனை கூடம் கொண்டு சென்று நல்ல விலைக்கு விக்கலாம் என்று கொண்டு சென்றால் இது அங்கீகரிக்கப்பட்ட பயிர் அல்ல. இங்கு விற்க முடியாது என கூறுகின்றனர்.

இதை சாகுபடி செய்த விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து விலை நிர்ணயமும், ஏற்றுமதி மற்றும் விற்பனை வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...