கோவை அருகே ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை - ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டு

ஆம்புலன்ஸில் வரும் வழியில் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் சோதிக்கப்பட்ட நிலையில் தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயேகுழந்தை பிறந்த நிலையில் ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கோவைநல்லாம்பாளையம் ரோடு, ரத்தினபுரியை சேர்ந்தவர் பழனிமுருகன்.இவரது மனைவி மம்தா( 29. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்வதற்காக, 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மம்தாவை அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு வந்தனர். மம்தாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததால், அவரை ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப ஊழியர் கோபாலகிருஷ்ணன் பரிசோதித்தார்.

குழந்தையின் தலை வெளியில் வந்தது தெரிந்தது.இதனால் வேறு வழியின்றி அவர், பிரசவம் பார்த்தார். இதில் மம்தாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மம்தாவை, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாய் மற்றும் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசரகாலத்தில் விரைந்து செயல்பட்டஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...