தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் அமைப்பு தினம் கொடியேற்று விழா

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக் கிளை தலைவர் செந்தில்குமார், வட்டக்கிளை செயலாளர் நவீன், வட்டக்கிளை இணை செயலாளர் பிரேமலதா ஆகியோர் கொடியினை ஏற்றி வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக்கிளை சார்பாக இன்று தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.



தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக் கிளை தலைவர் செந்தில்குமார், வட்டக்கிளை செயலாளர் நவீன், வட்டக்கிளை இணை செயலாளர் பிரேமலதா ஆகியோர் கொடியினை ஏற்றினர்.



தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு சங்கத்தின் கோட்ட தலைவர் பீட்டர், தமிழ்நாடு நூலகத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தணிக்கையாளர் பால ராஜசேகர், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...