கோவையில் மழை நீர் வடிகால் கட்டும் பணி - மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்

வெள்ளக்கிணறு, சக்தி கிரீன் லேன்டு, பள்ளக்காட்டு தோட்டம் பகுதியில் 3 கி.மீ. தொலைவிற்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கவுண்டம்பாளையம் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வடிகால் திரும்ப கட்டுதல் பணியை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.17க்குட்பட்ட கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் பிரதான சாலை முதல் சங்கனூர் பள்ளம் வரை மூலதன நிதி திட்டத்தின்கீழ் ரூ.169 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் திரும்ப கட்டுதல் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்கள்.



உடன் மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத், செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் யோகசித்ரா, உதவி பொறியாளர் ராஜேஸ்வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் - வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் ஆகிய பகுதிகளில் ரூ.860.80 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத்திட்டப்பணிகளின் ஒருபகுதியாக வடக்கு மண்டலம் வார்டு எண்.14க்குட்பட்ட வெள்ளக்கிணறு, சக்தி கிரீன் லேன்டு, பள்ளக்காட்டு தோட்டம் பகுதியில் 3 கி.மீ. தொலைவிற்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா தங்கவேல்,பழனிசாமி (எ) சிரவை சிவா, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தமிழ்செல்வன், உதவி நிர்வாக பொறியாளர் கீதாதேவி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எழில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் காளிமுத்து, மாநகராட்சி உதவி பொறியாளர் உத்தமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...