முடிவடையும் தருவாயில் கோவை மேம்பாலப் பணிகள் - மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு

கோவையில் அனைத்து சாலை பணி வேலைகளும் முடிந்து கூடிய விரைவில் மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என்று எல்.முருகன் தெரிவித்தார்.


கோவை: கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாக மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.



கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த மேம்பாலத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர்களிடம் இதுகுறித்து விசாரித்தார்.



தொடர்ந்து நிருபர்களிடம் பேசும் பொழுது, கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மேம்பாலம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் வி .கே.சிங் இந்த மேம்பாலத்தின் நேரில் ஆய்வு செய்துள்ளார்.

மேலும் மேம்பாலத்தின் கீழே செல்லும் சர்வீஸ் சாலையில் வேலைகளும் நடைபெற்று வருகிறது. உள்ளூர் மக்களின் ஆலோசனைகள் கேட்டு அதற்கான முறையில் இந்த வேலைகள் நடைபெற்று வருகிறது. அனைத்து வேலைகளும் முடிந்து கூடிய சீக்கிரம் இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழக அரசு பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் நடத்த வேண்டும். ஆனால் டாஸ்மாக் கடைகளை தான் நடத்தும் வேலைகளை செய்து வருகிறது. இன்று ஊர் ஊருக்கும் அதாவது கிராமத்தில் மருத்துவ வசதிகள் இருக்கோ, இல்லையோ ஆனால் டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. அங்கன்வாடிகள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதற்கு கூட ஸ்டாலின அவருக்கு மனசு வரவில்லை. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு டார்கெட்டை ஃபிக்ஸ் பண்ணும் அவல நிலைதான் அரசு செய்து வருகிறது.

திமுக என்னும் அரக்கனுக்கு வரும் 2024-ஆம் தேர்தலிலேயே அவர்களுக்கு நல்ல பாடம் கொடுக்கப்படும். மேலும் 2026 ஆம் ஆண்டு திமுக இன்னும் அரக்கன் விரட்டி அடிக்கப்பட்டு நல்ல தீபாவளி கொண்டாடுகின்ற நேரம் வர இருக்கிறது. சென்னையில் மழை வரும் வரவே வராது. ஏற்கனவே அனைத்து மாற்றப்பட்டுள்ளது.

மேலும் சென்னையை சிங்கார சென்னை என்றும் சிங்கபூராக மாற்றுவோம் என்றும் தெரிவித்தனர். ஆனால் கூவமும் அப்படியேதான் இருக்கிறது, சென்னையும் அப்படியே தான் இருக்கிறது. இன்று சென்னைக்குள் கால் வைக்க கூட முடியவில்லை. ரோடு குண்டும் குழியமாக இருக்கிறது. கோயம்புத்தூரிலேயும் அப்படியேதான் இருக்கிறது. மாநகராட்சிக்குள் சாலைகள் குண்டும் குழியுமாகத் தான் இருக்கிறது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தான் சென்று வர வேண்டிய நிலைமை உள்ளது .

வரும் இரண்டு மாதங்களும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அப்பொழுது சென்னை எப்படி தாங்கும் என்று கேள்விக்குறியாக உள்ளது. இந்த அரசாங்கம் வெறும் வாய்ச்சவடல் அரசாங்கமாகவே உள்ளது. வாய்ச்சவாடாலை விட்டுட்டு ஆக்கபூர்வமான செயலை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பி.ஜே.பி கட்சி மாவட்ட தலைவர் சங்கீதா, நீலகிரி பாராளுமன்ற பார்வையாளர் நந்தகுமார், மாவட்ட பொதுசெயலாளர் சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...