100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் கேட்டு கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் நிறுத்தி வைத்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய பாஜக அரசு முடக்க நினைப்பதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.


கோவை: கோவை தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் வழங்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பாக துடியலூர் அருகில் உள்ள தொப்பம்பட்டி பிரிவில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் நிறுத்தி வைத்து திட்டத்தை மத்திய பாஜக அரசு முடக்க நினைப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாரத்திற்கு அகில இந்திய பொது செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் கணபதி சிவக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் பி வி மணி, பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையை வைத்தனர்.

வட்டாரத் தலைவர் பி.டி மோகன்ராஜ் வரவேற்று பேசினார். இதில் பங்கேற்றவர்கள் மத்தியஅரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கவுன்சிலர் சிவக்குமார் வசந்த் தமிழ்ச்செல்வன். ராமநாகராஜ், சுரேந்திரபாபு செல்வராஜ் சிங்காரம் ராஜேந்திரன், சூர்யா வெள்ளிங்கிரி உட்பட பல கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...