கோடாங்கிபாளையத்தில் கல்குவாரியில் டெட்டனேட்டர் வைத்து வேட்டு - வீடுகளில் விரிசல்

சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிக்கு வைத்த வேட்டால், நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல் உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதில் குவாரிக்குள் இருக்கும் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடாங்கி பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் விஜயலட்சுமி என்ற கல்குவாரியில் நேற்று மாலை வேட்டு வைத்ததாகவும் அதற்கு சட்டவிரோதமாக டெட்டநேட்டர்களை பயன்படுத்தியதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



மேலும் இந்த கல்குவாரி ஒரு மாத காலம் ரீஸ் காலம் முடிந்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகவும் இந்நிலையில் ஒரு ரூம் முழுக்க வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததாகவும் அது வெடித்ததில் கல்குவாரிக்குள் இருக்கும் வீடுகள் இடிந்து தரைமட்டமாக உள்ளதாகவும் அதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகள் விரிசல் விட்டும் வீட்டின் கண்ணாடிகள் இடிந்து விழுந்தும் மாபெரும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் குடியிருக்க முடியவில்லை என்று இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்து தற்போது சம்பவம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



இதனை தொடர்ந்து சிலிண்டர் வெடித்து விட்டதாக பொய்யான தகவலை கூறுவதாகவும் இதற்கு பல்வேறு அலுவலர்களும் துணை போவதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் கால அவகாசம் முடிந்த நிலையிலும் பயன்படுத்தி வந்தது எப்படி இதுபோன்று மாபெரும் வெடி விபத்து ஏற்பட்டும் இன்னும் இதுவரை இந்த கம்பெனியை சீல் வைக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? என்று பல்வேறு கேள்விகளை இப்பகுதி விவசாயிகள் எழுப்புகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...