உடுமலை வருவாய் கோட்டாட்சியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

மடத்தூர் பிரிவில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் வீட்டின் பூட்டை உடைத்து டிவி, ஸ்டெபிலைசர், வாஷிங் மெஷின், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து ஜஸ்வந்த் கண்ணன் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாச்சியராக ஜஸ்வந்த் கண்ணன் பணியாற்றி வருகிறார். இவருக்கு அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பு பள்ளபாளையம் அருகே மடத்தூர் பிரிவில் அமைந்து உள்ளது. அதில் தங்கி இருந்து ஜஸ்வந்த் கண்ணன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி குடியிருப்பை பூட்டிவிட்டு சொந்த ஊரான பரமத்திவேலூருக்கு சென்று விட்டார்.

பின்னர் பணிக்கு திரும்பிய அவர் அலுவலக பணிகளை முடித்துக் கொண்டு இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது.



உள்ளே சென்று பார்த்த போது டிவி, ஸ்டெபிலைசர், வாஷிங் மெஷின், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட 1லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து ஜஸ்வந்த் கண்ணன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆர்.டி.ஓ குடியிருப்பில் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...