தாராபுரம் ஐயப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் தாராபுரம் சோழக்கடை வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது.


திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் தராரபுரம் ஐயப்பன் திருக்கோயில் மகா கும்பாபிசேகத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சோளக்கடை வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி ஆலய ஜீர்னோத்தாரன அஷ்பந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

தாராபுரம் சோழக்கடை வீதியில், ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கும் பணி, மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.



தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர். தொடர்ந்து, முதல்கால யாக பூஜை நடந்தது. 14-ம் தேதி காலை, இரண்டாம் காலயாக பூஜையும், அன்று மாலை, மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. 15-ல் நான்காம் கால யாக பூஜையும், மாலை, ஐந்தாம் கால யாக பூஜையும், கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.



காலை, ஆறாம் கால யாக பூஜையும், 8:30 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகமும், 9:30 மணிக்கு ஐயப்பன், மூலஸ்தானத்தில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் தாராபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோபுர தரிசனம் மற்றும் சுவாமி தரிசனம் செய்தனர்.

குறிப்பாக ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் தாராபுரம் சோழக்கடை வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது. என்பது தாராபுரம் ஐயப்பன் கோயிலின் சிறப்பு என பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு ஸ்ரீ ஐயப்பன் கோவில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் ஜெமினி பெருவழி பயணக்குழு, தலைவருமான சி.சண்முகவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...