உடுமலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பழனியை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று ஈஸ்வரன் என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.


திருப்பூர்: உடுமலை அடுத்த சுண்டக்காம் பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(52). இவர் வேலை நிமித்தமாக சென்று விட்டு நேற்று இரவு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். இவரது வாகனம் ஜிவிஜி கல்லூரி அருகே உடுமலையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது பழனியை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று ஈஸ்வரன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

இது குறித்த தகவல் உடுமலை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் ஈஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...