கோவையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி - வரும் 25ம் தேதி தேர்தல் பார்வையாளர் வருகை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான தேர்தல் பார்வையாளர் சங்கர், வரும் 25ல் கோவையில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் ஆய்வு செய்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.


கோவை: கோவை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 27ல் வெளியிடப்பட்டது. 2024, ஜன.,1ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, 18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

அதன்படி, 4, 5 தேதிகளில் நடத்திய முகாமில், 34 ஆயிரத்து 921 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டாம் கட்ட முகாம், வரும் 18, 19ம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 13ம் தேதி (திங்கள்) அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதற்கு ஈடாக, 18ம் தேதி (சனி) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் பலரும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக இருப்பதால், அவர்கள் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

இது, தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, இரண்டாம் கட்ட சிறப்பு முகாம், 25 (சனி) மற்றும், 26ம் தேதிக்கு(ஞாயிறு) மாற்றப்பட்டிருக்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்காக, நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர் சங்கர், 25ல் கோவையில் முகாம் பணிகளை ஆய்வு செய்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...