மனக்கடவு அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர் கயல்விழி அஞ்சலி

ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் நேற்று மாலை பெட்ரோல் டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தமிழ்மணி, சித்ரா, கலாராணி, செல்வராணி, பாலகிருஷ்ணன், ஆகிய ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த மனக்கடவு அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உடல்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மனக்கடவு ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் நேற்று மாலை பெட்ரோல் டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தமிழ்மணி, சித்ரா, கலாராணி, செல்வராணி, பாலகிருஷ்ணன், ஆகிய ஐந்து பேரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.



அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது பிரேத பரிசோதனை முடிவடைந்த பிறகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டது.



இறந்தவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உயிர் இழந்தவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...