பல்லடம் அருகே diaper தயாரிக்கும் நிறுவனத்திற்கு எதிர்ப்பு - பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் diaper தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் சார்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே diaper தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே வாவிபாளையம் கிராமத்தில் வேலாத்தாள் நிறுவனம் என்ற பெயரில் டயப்பர் தயாரிக்கும் நிறுவனம் புதிதாக அமைய உள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஊராட்சி நிர்வாகத்தில் கட்டிட அனுமதி பெறாமலேயே கட்டுமான பணிகளை செய்து வருவதாகவும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாக்கும் வகையிலும் இந்த நிறுவனம் அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்த நிறுவனத்தில் உபயோகப்படுத்தும் மூலப் பொருட்கள் மற்றும் அதன் கழிவுகள் நீர்வழிப் பாதையை அடைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும்,விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும் எனக் கூறி வாவிபாளையம், குள்ளம்பாளையம், கம்மாளப்பட்டி, கேத்தனூர், வரப்பாளையம், மந்திரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், திமுக, அதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்,மதிமுக என அனைத்து கட்சி நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் உடுமலை பல்லடம் சாலையில் வாலிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் டயப்பர் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் சார்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...