உடுமலை அருகே அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா - ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு

உடுமலை கிழக்கு அரிமா சங்கத்தின் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் நோட்புக், பென்சில், பேனா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

உடுமலை அடுத்த சித்தக் குட்டை இந்திரா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. உடுமலை கிழக்கு அரிமா சங்கம் மற்றும் தனியார் அமைப்பும் இணைந்து விழாவை நடத்தியது. நிகழ்வுக்கு தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.



வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வை துவக்கி வைத்தார். பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



உடுமலை கிழக்கு அரிமா சங்கத்தின் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் நோட்புக், பென்சில், பேனா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உடுமலை கிழக்கு அரிமா சங்கத் தலைவர் வக்கீல் ராஜாராம், செயலாளர்கள் விஜயமோகன், ராஜா சந்திரசேகர், பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், தனியார் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...