ஆவாரம்பாளையத்தில் போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்பனை - 15 பேர் மீது வழக்கு

ரவிகுமார் என்பவர், 2016ம் ஆண்டு தனது தெரிந்த, 14 பேருடன் சேர்ந்து குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு போலியாக பத்திரம் தயாரித்து, வேறு நபர்களுக்கு விற்றுள்ளார். நிலம் வாங்கிய நபர்கள் அங்கு சென்று செட் அமைத்து தங்கியுள்ளனர். இதுகுறித்து புகாரின்பேரின் ரவிக்குமார் உட்பட, 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்ற, 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் குமார், 63, இவருக்கு அவிநாசி ரோட்டில் காலி இடம் உள்ளது.

அந்த இடத்தை ரவிகுமார் என்பவர், 2016ம் ஆண்டு தனது தெரிந்த, 14 பேருடன் சேர்ந்து போலியாக பத்திரம் தயாரித்து, வேறு நபர்களுக்கு விற்றுள்ளார். நிலம் வாங்கிய நபர்கள் அங்கு சென்று செட் அமைத்து தங்கியுள்ளனர். இதை அறிந்த குமார், தன்னுடைய நிலத்தில் இருந்து வெளியேறும் படி கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் குமாரை மிரட்டி அனுப்பினர். இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் காலி செய்யாததால், குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரவிக்குமார் உட்பட, 15 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...