சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபர் - போக்சோ சட்டத்தில் கைது செய்த கோவை காவல்துறை

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரகாஷ் சிறுமியை அழைத்து சென்றார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் 23 -ந் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்தார். திருமணம் முடிந்ததும் அவரது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றார். அங்கு வைத்து பிரகாஷ் சிறுமியை பலாத்காரம் செய்தார். தற்போது சிறுமி 6 மாத கர்ப்பமாக உள்ளார்.

இதனை நோட்டமிட்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்குசென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரிகள் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...