வால்பாறை அருகே தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் - கழுத்தில் சேலை சிக்கி உயிரிழந்த சோகம்

தங்கை கிருத்திகா உடன் விளையாடிய போது எதிர்பாராத விதமாக கழுத்தில் சேலை சுத்தியுள்ளது. விளையாட்டால் விபரீதம் ஏற்பட்டு சிறுவன் பலியானது இப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே 12 வயது சிறுவன் தொட்டில் கட்டிவிளையாடும் போது கழுத்தில் சேலை சிக்கி உயிரிழந்தார்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதியில் சசி குமார், சூர்யா அவர்கள் மகன் ராஜா 12 வயது கருமலை எஸ்டேட் நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடித்து வீட்டிற்குச் சென்ற சிறுவன் வீட்டின் வாசலில் உள்ள சட்டத்தில் சேலையால் தொட்டில் கட்டி தனது தங்கை கிருத்திகா உடன் விளையாடிய போது எதிர்பாராத விதமாக கழுத்தில் சேலை சுத்தியுள்ளது.



மேற்படி சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர் மேற்படி சிறுவன் இறந்துள்ளார் என்று தெரிவித்த நிலையில் சிறுவனின் பிரேதம் வால்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டால் விபரீதம் ஏற்பட்டு சிறுவன் பலியானது இப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...