குண்டடம் அருகே கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் - திரளான கால்நடைகள் பங்கேற்பு

பசு, எருமை மாடு, ஆடு, கோழி, நாய் ஆகிய கால்நடைகளுக்கு கூடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி உள்ளிட்ட 1,195 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.


திருப்பூர்: குண்டடம் அடுத்த கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

குண்டடம் அடுத்த கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் சூரியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கோப்பனகவுண்டன் பாளையத்தில் நடைபெற்றது. குண்டடம் வட்டாரம் பேட்டை காளிபாளையம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

முகாமில் பீலிக்காம்பட்டி கால்நடை உதவி மருத்துவர் மோகன்ராஜ் தலைமையில் மருத்துவர் கொண்ட குழுவினர் பசு, எருமை மாடு, ஆடு, கோழி, நாய் ஆகிய கால்நடைகளுக்கு கூடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி உள்ளிட்ட 1,195 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும் மழை மற்றும் பனிக்காலத்தில் கால்நடைகளை எவ்வாறு பாதுகாப்பது குறித்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் முதலிபாளையம் கால்நடை உதவி மருத்துவர் அருண்நிதி, பொன்னாங்காளிவலசு கால்நடை ஆய்வாளர் காந்திமதி, குண்டடம் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுமதி, விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சிறந்த கால்நடை மேலாண்மைக்கான மூன்று சிறப்பான வளர்ப்பு கிடாரி கன்றுகளின் உரிமையாளரான விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...