பாப்பம்பட்டியில் இருந்த டாஸ்மாக் கடையினை இடையர்பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து ஆட்சியரிடம் மனு

பாப்பம்பட்டியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையினை இடையர்பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், பாப்பம்பட்டி கிராமத்தில் தற்பொழுது பல்லடம் முதல் கொச்சின் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை நீதிமன்ற உத்தரவுப்படி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் தற்பொழுது இந்த மதுபான கடையை பாப்பம்பட்டி முதல் இடையர்பாளையம் சாலையில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த இடத்தின் அருகில் விவசாய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவை உள்ளதால் டாஸ்மாக் கடை அமைப்பதன் மூலம் அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் சிரமம் ஏற்படும். 

மேலும், இப்பகுதி முக்கியசாலையில் உள்ள அபாய வளைவு பகுதியாகும். மேலும், இங்கு மதுபான கடை அமைத்தால் விபத்துகள் அதிகரிக்கும்.

எனவே கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு இடையர்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...