வால்பாறை அருகே தடுப்புச் சுவரில் மோதி டிராக்டர் விபத்து - எஸ்டேட் தொழிலாளி படுகாயம்

டிராக்டர் விபத்தில் மகேஷ்வரன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர். பாலத்தில் இருந்து தண்ணீரில் விழுந்து தலையில் அடிபட்ட நிலையில், 11 பேர்கள் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் உள்ளனர்.


கோவை: வால்பாறை அருகில் நடுமலை ஆற்று பாலத்தி சென்ற எஸ்டேட் டிராக்ட்டர் தடுப்பு சுவரில் மோதியதில் எஸ்டேட் தொழிலாளிகள் காயம் அடைந்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் நேற்று வீட்டு வாசலில் 12 வயது சிறுவன் சேலையால் ஊஞ்சல் கட்டி ஆடும்போது கழுத்தில் சேலை மாட்டி இறந்தது உடலை வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து தங்களது குலவழக்கப்படி நல்லடக்கம் செய்ய வேண்டி உறவினர்களிடம் சிறுவனின் பிரேதம் ஒப்படைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.

மேற்படி பிரேதத்துடன் பின் தொடர்ந்து எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான டிராக்டரை ஆகஸ்டின் என்பவர் 12 நபர்களுடன் ஓட்டி சென்று உள்ளார்.



நடுமலை எஸ்டேட் ஆற்று பாலம் வளைவில் திருப்பிய போது தடுப்புச் சுவரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மோதியதில் மகேஷ்வரன் வயது 43 என்பவர் பாலத்தினுள் தண்ணீரில் விழுந்தது. இதில் தலையில் அடிபட்ட நிலையிலும் 11 பேர்கள் லேசான காயங்களுடனும் வால்பாறை காவல் துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



இதில் மகேஷ்வரன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...